ரிஷி / பக்கம் – 03
இப்போது நீர் வந்து மணலை அழைத்து செல்லும் பார் என்றார். கடல் அலை கரைக்கு வந்து மணலை கடலுக்குள் அழைத்துச் சென்றது. அதை பாதத்தில் உணர்ந்த ரிஷி தாத்தாவை பார்த்து சிரிக்கின்றான். தாத்தாவும் சிரித்துக்கொண்டே இருவரும் அலையில் விளையாடிவிட்டு வீட்டிற்கு செல்ல ரிஷியை தூக்கிக்கொண்டு தாத்தா மிதிவண்டியை நோக்கி நடந்தார். பாதியில் ரிஷி தாத்தா இறக்கிவிடுங்க என உதறிவிட்டு இறங்கி ஓடினான்…
என்னவென்று புரியாமல் தாத்தா ரிஷியை பார்க்கிறார்… காற்றில் பறந்த காகிதத்தாலை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தாத்தாவிடம் ஓடிவந்தான் ரிஷி. தாத்தா சந்தோஷமாக சிரித்துக்கொண்டே ரிஷியை தூக்கி மிதிவண்டியில் அமரவைத்து புறப்பட்டார். ரிஷி தாத்தாவின் முதுகில் சாய்ந்து இருக்கமாக பிடித்துக் கொண்டு தூரத்தில் தெரியும் கடல் அலையை பார்த்து புன்னகைக்கின்றான்.
நன்றி, மீண்டும் இணைவோம்…
கதை எழுத்து – பாலமுருகன் மணிகண்டன்