ரிஷி / பக்கம் – 02

ஒரு நாள் கடல் அலை நீரும் கடற்கரையின் மணலும் பேசிக்கொள்கிறார்கள். நீர் சொல்கிறது நீ ஏன் மணல் அங்கு தனியா இருக்க என்னுடன் கடலுக்கு வா இங்கு நிறைய மீன்கள் நிறைய உயிரினங்கள் இருக்கின்றன அதனுடன் சேர்ந்து நாமும் சந்தோஷமாக விளையாடுவோம் வா என்று அழைத்தது. அதற்கு மணல் சொல்லியது நான் இங்கு இருப்பதால்தான் நிறைய மக்கள் வந்து செல்கிறார்கள் இவர்களோடு விளையாடுவதுதான் சந்தோஷமாக இருக்கும் நீயும் கரைக்கு வந்துவிடு நாம் இங்கு சிறு பிள்ளைகளோடு மற்றும் பல மனிதர்களோடு ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்றது மணல். அப்படியே இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள்.

 நீர் சொல்கிறது உன் மேல்தான் குப்பைகளை போடுகிறார்கள் அதோடு நீ இருந்தால் உன்னால் மூச்சு விட முடியாமல் என்னிடம்தான் வர வேண்டிய கட்டாயம் வரும் யோசித்துப்பார் என்றது நீர். அதற்கு மணல் சொல்கிறது பலவித நிறுவனத்தின் கலப்படமான நீரை கலப்பதும் மற்றும் பலவற்றை கரைப்பதும் உன்னிடம்தான் செய்கிறார்கள் இப்படி இருந்தால் நீயும் மூச்சு விட முடியாமல் கடற்கரைக்குதான் வரவேண்டிய கட்டாயம் வரும் நீயும் யோசித்துப்பார் என்றது மணல்.

 நீருக்கும் மணலுக்கும் என்ன முடிவு செய்வது என்று தெரியவில்லை ஆனால் இருவருக்கும் சேர்ந்து விளையாட ஆசையாக உள்ளது. சிறிது நேரம் யோசனைக்கு பிறகு இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கின்றார்கள்…

எப்போதெல்லாம் உன் மேல் குப்பை இல்லாமல் நீ சுத்தமாக இருக்கின்றாயோ அப்போது நான் மணலில் விளையாட வருகின்றேன் அதேபோன்று எப்போதெல்லாம் எனக்குள் கலப்படங்கள் இல்லாமல் இருக்கின்றதோ அப்போது நீ என்னுடன் வந்து விளையாடு என்றது நீர். மணலும் சரி எனக்குறி இருவரும் சந்தோஷமாக விளையாட துடங்கினார்கள்…

 ரிஷி கேட்கிறான் அவங்க ரெண்டு பேரும் எப்படி தாத்தா விளையாடுவாங்க…  தாத்தா ரிஷியை தூக்கிக்கொண்டு கடல் அலை அடிக்கும் இடத்தில் ரிஷியின் பாதம் மண்ணில் பதிய நிறுத்தி பிடித்துக்கொண்டார்…

பக்கம் எண் > 1 2 3