சிறு குறு வியாபாரிகள் / பக்கம் – 01

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் கடவுள் இருக்கிறார் என்று நம்பி கோவிலுக்கு வரும் மக்கள் கூட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுகுரு வியாபாரிகள் கோவிலுக்கு செல்லும் வழியெல்லாம் கடை போட்டு அந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் வியாபாரிகளில் ஒருவராக இணைந்திருக்கிறார் ராசு.

 கோவிலுக்கு செல்லும் சாலையில் புதிதாக பூக்கடை போட்டு இருக்கிறார் ராசு. அந்த வீதியில் கடை போட்டு இருப்பவர்களை போல தான் ராசுவும் வியாபாரம் செய்கிறான். பூ வாங்குவதற்காக ராசு கடைக்கு வரும் மக்களில் நூற்றுக்கு 99 சதவீதம் மக்கள் ராசு சொல்லும் விலைக்கு வாங்குவதில்லை மீதமுள்ள ஒரு சதவீத மக்கள் வாடிக்கையாக கோவிலுக்கு வருபவராக இருப்பார்கள் பூவின் விலை எவ்வளவு இருந்தாலும் பத்து ரூபாய்க்கு கொடுப்பா இருபது ரூபாய்க்கு கொடுப்பா கொஞ்சம் விட்டு நறுக்குப்பா என கேட்டு வாங்கி செல்வார்கள். இவர்களுக்கு மத்தியில் தான் பூக்கடை நடத்தி தன் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார் ராசு.

 மாதக் கடைசி வர வர அடுத்த மாத செலவிற்கு பயந்து பசியை மறைத்து தூக்கத்தை தொலைத்து அடுத்த மாத செலவுக்காக சேமிக்கும் அன்றாட வருமானத்தில் வாழும் நடுத்தர வர்க்க கூட்டத்தில் ஒருவராக வாழ்பவர் தான் ராசு. வாடகை வீட்டில் மனைவி மற்றும் ஆறு வயது மகளுடன் வசித்து வருகிறார். அக்கம் பக்கத்தில் அன்றாட வீசும் சமையல் வாசனை நம் வீட்டில் தினமும் வீசி விடாதா என்ற கேள்விக்கு பதில் தேடும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

 ஊரே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழாவிற்கான மாதம் வந்துவிட்டது. மூன்று நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவிலில் தொடங்கியது. அங்கு இருக்கும் கடைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் சிறு குரு  வியாபாரிகள் முதலீட்டிற்காக ஆங்காங்கே கடன் வாங்க தொடங்கினார்கள். ராசுவும் பூக்களை கொள்முதல் செய்வதற்காக தெரிந்தவர்களிடம் கடன் கேட்க சென்றான். இதற்கு முன்பு வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் வட்டியில் தள்ளுபடி கேட்டு கடனை செலுத்திய காரணத்தினால் கடன் தருபவர்கள் மறுத்துவிட்டார்கள். என்ன செய்வதென தெரியாமல் இரவு வீட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். மனைவி ராசுவை பார்த்து என்னங்க ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க என கேட்டார். ராசு கடன் மறுக்கப்பட்டதையும் வியாபாரம் செய்ய முதலீடு இல்லாததையும் சொன்னார். அதைக் கேட்டு வீட்டில் கடைசியாக இருந்த அரை பவுன் தங்க காசை எடுத்து வந்து கையில் கொடுத்து இதை வைத்து வாங்கி வியாபாரத்தை தொடங்குங்கள் என மனைவி சொல்லியதை கேட்டு வேணாமா நாளைக்கு ஒரு நாள் இருக்கு இல்ல நான் எங்கேயாவது கடன் கிடைக்குதான்னு பார்க்கிறேன் என சொல்கிறான்.

 வாங்கற பணத்தை வட்டியோட திரும்ப எப்ப தருவோம் என தெரியாமல் நம்மை நம்பி பணம் கொடுப்பதற்கு நாம என்ன கடவுளாங்க. இதை வைத்து பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என மனைவி சொல்லியதை ஏற்று மறுநாள் இரண்டு வட்டிக்கு அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார்.  திருவிழா ஆரம்பித்தது ராசு பூக்களை கொள்முதல் செய்து வியாபாரத்தை தொடங்கினார். அங்கு போடப்பட்டிருந்த கடைகள் எல்லாம் பேரம் பேசி வாங்கும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. மூன்று நாள் முடிவில் வியாபாரம் அமோகமாக நடந்து முடிந்த சந்தோஷத்தோடு கடைகளை அடைத்துவிட்டு  வீட்டிற்கு செல்ல வியாபாரிகள் தொடங்கினார்கள்.

பக்கம் எண் > 1 2 3 4