சிறு குறு வியாபாரிகள் / பக்கம் – 03

எம்ஆர்ஐ டெஸ்ட் எடுக்கணும் பணம் கட்டிட்டு வந்துருங்க என சொல்கிறார்கள் ராசுவும் ஓடி சென்று பணத்தை கட்டிவிட்டு வந்து காத்திருக்கிறார் மேலும் பல டெஸ்ட் எடுக்கிறார்கள் மருத்துவர் வெளியே வந்ததும் ராசுவும் மனைவியும் என் மகள் எழுந்துட்டாளா ஐயா எப்படி இருக்கா என அழுத குரலோடு கேட்கிறார்கள். கண்ணு முழிச்சுட்டாங்க இப்போதைக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஏன் பிக்ஸ் வந்துச்சு என காரணம் எல்லாம் ரிப்போர்ட் வந்தால்தான் சொல்ல முடியும் இது முதல் முறை என்பதால் ஒரு நாள் மருத்துவ கண்காணிப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். மகள் கண் விழித்த சந்தோசமே போதும் என்று சொல்லும் அளவிற்கு மனது லேசானது. மகனை பார்க்கலாமா என கேட்டா  ஒரு மணி நேரத்தில் நார்மல் வார்டுக்கு மாற்றி விடுவோம் பிறகு பார்க்கலாம் என்றார்.

 அந்த ஒரு மணி நேரம் ஒரு யுகம் கடந்ததை போல காத்திருந்தார்கள். மகள் வெளியே வந்ததும் ஓடி கட்டி அணைத்து கொள்கிறார்கள். உனக்கு ஒன்றும் இல்லம்மா தங்கமே என சொல்லி முத்தமிட்டார்கள். ஒரு நாள் மருத்துவ மனைவியே இருந்தார்கள். மருத்துவர் எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டைகளையும் பார்த்துவிட்டு பயப்படும் அளவிலான பிக்ஸ் இல்லை காய்ச்சல் அடித்தால் வரக்கூடிய சாதாரண பிக்ஸ் தான் இதற்குப் பிறகு காய்ச்சல் அடித்தால் சாப்பிடும் மாத்திரைகளுடன் ஒரு சிறப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கொடுத்தார். அதைக் கேட்டு மனதை அமைதிப்படுத்திக் கொண்டு பாப்பாவிடம் வந்து அமர்ந்தார்கள் டிஸ்சார்ஜிக்கு பில் கட்டிட்டு டேப்லெட் வாங்கிக்கோங்க என சிஸ்டர் சொல்லி அதைக் கேட்டு ராசு எழுந்து சென்றான். டெஸ்ட் எடுத்தது ஒரு நாள் மருத்துவமனையில் இருந்த கட்டணம் மற்றும் 15 நாளிற்கான மருந்து மாத்திரை சேர்த்து மருந்தகர் சொன்ன பணத்தை எடுத்து எண்ணி பார்க்கிறார் காசு குறைந்தது பத்து நாளைக்கு மட்டும் மருந்து மாத்திரை கொடுங்க ஐயா என்றார். பத்து நாட்களுக்கும் வாங்குவதற்கும் பணம் குறைந்தது. மருந்தகர் உன்கிட்ட எவ்வளவு தான் இருக்கு என கேட்டார். ராசு கையில் இருந்த எல்லா பணம் மற்றும் சில்லறைகளோடு சேர்த்து சொன்னான். மருந்தகர் இதெல்லாம் பத்தாது பா என்றார். ஐயா ஏதாவது பார்த்து குறைச்சு கொடுங்க ஐயா என்றான் ராசு. மருந்தகர் சரி ஓரமா நில்லு என சொல்லிவிட்டு அவர் மேல் அதிகாரியிடம் சென்று மருந்து சீட்டை கொடுத்து விவரத்தை சொல்லிவிட்டு வந்து அடுத்த நபருக்கு மருந்து எடுத்து கொடுக்க தொடங்கினார்.

 அந்த தருணத்தில் அங்கு இருந்த மக்கள் அனைவரும் சேர்ந்து அவர்களிடம் இருந்த பணத்தை கொடுத்து முழு மருந்து மாத்திரையும் வாங்கி ராசுவின் கையில் கொடுக்கிறார்கள். ராசு கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவர் சொல்கிறார்  இது எங்க காசு இல்லை உங்ககிட்ட பேரம் பேசி வாங்கின உங்க காசு தான் என சொல்லியதும் சுற்றி நின்றவர்கள் கைதட்டி அந்த செயலை பாராட்டுகிறார்கள்.

 ஒரு கைத்தட்டல் சத்தம் மட்டும் வேகமாக கேட்டது. ராசு திரும்பிப் பார்க்கிறார் எவ்வளவு நேரம் கூப்பிட்டுக் கொண்டு இருக்கேன் அங்க என்ன கனவு கண்டிட்டு இருக்கீங்க என மருந்தகர் கேட்டார். ராசு சுற்றி பார்க்கிறான் அவன் கடைக்கு வந்து சென்றவர்கள் மருந்தகத்தில் நின்று மருந்தகர் சொல்வதை  வேடிக்கை பார்க்கிறார்கள். அதை பார்த்ததும் ராசு கண்கள் கலங்கியது அதை தொடைத்துவிட்டு மருந்தகரிடம் சென்றார்.

பக்கம் எண் > 1 2 3 4