ரிஷி / பக்கம் – 01
எப்ப பாரு ஃபோனை நோண்டிகிட்டே இருக்காத என வெடிக்கென்று ஃபோனை பிடுங்கிய அம்மா ராதிகா…
வீடே இரண்டாகும் அளவிற்கு சத்தம் போட்டு அழுத நான்கு வயது சிறுவன் ரிஷி…
அழுகை சத்தம் கேட்டு வீட்டிற்குள் ஓடி வந்த தாத்தா ரத்தினம்…
உங்கள் வேலையை பார்ப்பதற்கு நீங்களே ஃபோன், டிவி என அனைத்தையும் பழகிவிட்டு இப்போ வை வை என்றால் எப்படி வைப்பார்கள். நீ வாடா தங்கம் நம்ம வெளியே போலாம் என்று ரிஷிக்கு சட்டை போட்டுவிட்டு காலனியை மாட்டிவிட்டு மிதிவண்டியில் தூக்கி அமரவைத்து தாத்தாவை பிடிச்சுக்கோப்பா எனக் கூறி மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்…
அமைதியான சூழலில் மிதமான காற்றுடன் அலையின் இசை கேட்கும் கடற்கரைக்கு அழைத்து வந்தார் தாத்தா. மிதிவண்டியை நிறுத்திவிட்டு ரிஷியின் காலணியை கழட்டி அவரது கைப்பையில் வைத்துக்கொண்டு ரிஷியை கீழே இறக்கிவிட்டார் . மெல்லிய பாதம் கடற்கரையின் மணலில் பதிய ஓடியாடி விளையாட துடங்கினான் ரிஷி. பார்த்து பொறுமையா விளையாடப்பா என சிரித்துக்கொண்டே கத்தினார் தாத்தா. ரிஷியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் அதை பார்த்து ரசித்துக்கொண்டே கடற்கரையின் மணலில் அமர்கிறார். ரிஷி குஷியாக விளையாடிவிட்டு சிரித்துக்கொண்டே ஓடிவந்து தாத்தா மடியில் விழுந்து தாத்தா இங்கு நாம் தினமும் வரலாம் தாத்தா என்றான். அதற்கென்னப்பா வந்துடலாம் எனக்கூறி மடியில் ரிஷியை அமரவைத்து இருவரும் கடல் அலையை பார்க்கிறார்கள். தாத்தா… தண்ணீர் ஏன் வந்துட்டு வந்துட்டு போது என கேட்டான் ரிஷி. அதற்கு பேர்தான் அலை என்றார் தாத்தா. இந்த அலை ஏன் தாத்தா வருது என கேட்டான் ரிஷி. அதற்கு தாத்தா சொல்கிறார் இந்த கடற்கரைக்கும், கடல் அலைக்கும் உள்ள பாசத்தைப் பற்றி சொல்கிறேன் கேளப்பா…